திருப்பூர் மாவட்டம் உடுமலை புதிய பேருந்து நிலையத்தில் பழனி மற்றும் குமரலிங்கம், கல்லாபுரம், கடத்தூர், கணியூர் போன்ற கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில், நுழைவு வாயில் பகுதியில் உயரமான கோபுர விளக்கு அமைக்கப்படாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.