உடுமலையில் தோட்டக்கலைத் துறை அறிவுரை

8பார்த்தது
திருப்பூர் உடுமலை அருகில் குடிமங்கலம் பகுதியில் தக்காளிப் பயிரில் பரவி வரும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். நோய் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 50EC 1.5 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மேலும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபி 2025 பருவத்திற்கு தக்காளிப் பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். ஒரு ஹெக்டர் தக்காளிப் பயிருக்கு ₹399 பிரீமியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தக்காளிப் பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 31ஆம் தேதி கடைசி நாள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி