உடுமலையில் 24 மணி நேரமும் மது விற்பனை..அதிர்ச்சி

51பார்த்தது
உடுமலையில் 24 மணி நேரமும் மது விற்பனை..அதிர்ச்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலை யூனியன் ஆபீஸ் அருகில் உள்ள உணவகத்தில் 24 மணி நேரமும் முறைகேடாக மதுக்கடை அமைத்து மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் நகராட்சி பகுதியில் அர்பன் வங்கி அருகில் அனுஷம் திரையரங்கம் பின்புறம் பஸ் நிலையம் அருகில் ராஜேந்திர ரோடு பகுதியில் உள்ள மதுக்கடை பகுதியில் உள்ள மதுபான கூடத்தில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. புதியதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி நமச்சிவாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.