திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர 21-வது வார்டு திமுக சார்பில் தமிழக முதல் அமைச்சரின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் கபடி போட்டி கபிலன்( EX MC ) நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ 7021 ரொக்க பணம் மற்றும் கோப்பையை காங்கிரஸ் முன்னாள் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஜே. ஜோஸ்வா வழங்கினார். மேலும் மற்ற வெற்றியாளர்களுக்கு காவல் உதவியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் வழங்கினர்.