திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில், டாக்டர் பத்மபூஷன் கமல்ஹாசனின் பிறந்தநாள், மாவட்ட செயலாளர் குரு முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி காந்த், ஊடக அமைப்பாளர் பஷீர், நற்பணி மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி, நகர நற்பணி செயலாளர் சந்தோஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர்கள் கார்த்திகேயன், சுரேஷ்குமார். M, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் கன்னி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.