திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாரத்தில் விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெற விவசாயிகள் காலதாமதம் செய்யாமல் உடுமலை வேளாண்மை அலுவலகத்தை அணுகி தனித்துவ அடையாள எண் பெற விண்ணப்பிக்க வேண்டும் என உடுமலை வேளாண்மை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.