உடுமலை அருகே தமிழக கேரளா எல்லையில் சிறுத்தை நடமாட்டம்!

74பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியான மறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மறையூர் பகுதியில் உள்ள சந்தனக் காட்டில் சிறுத்தை ஒன்று மரத்தின் மீது அமர்ந்திருக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.