திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல் குட்டை ஊராட்சி மலையாண்டிபட்டணம் பகுதியில் உள்ள நூலகம், செடி கொடிகள் அடர்ந்து புதர் மண்டி பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் விஷப் பூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வாசகர்கள் தெரிவித்துள்ளனர். நூலக கட்டிடத்தை உடனடியாக பராமரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.