உடுமலையில் மக்காச்சோளம் விலை சரிவு!!

2பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குவிண்டால் ரூ. 2500 வரை விற்று வந்த நிலையில், நடப்பு சீசன் துவக்கத்தில் ரூ. 2100 வரை மட்டுமே விலை போகிறது. மக்காச்சோளம் சாகுபடிக்கு விதை, உரம், மருந்து என அறுவடை வரை ஏக்கருக்கு ரூ. 45 ஆயிரம் வரை செலவாகிறது. எனவே, மக்காச்சோளத்திற்கு உரிய விலை கிடைக்கும் வகையில், தீவன உற்பத்தி நிறுவனங்களுடன் அரசு விலை நிர்ணயம் செய்து, ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி