திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு இன்று (பிப்.14) காலை சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியாளர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததால், பணியில் இருந்த செவிலியருக்கு அமைச்சர் டோஸ் விட்டார். இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.