திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி ருக்மணி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ராஜ கணபதி திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது தெளிக்கப்பட்ட பின்னர், பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோவில் வளாகத்தில் சொற்பொழிவு நிகழ்வும் நடைபெற்றது. இந்த விழாவில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.