திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்லைன் மற்றும் போலி மருந்து விற்பனையை தடுக்க வலியுறுத்தி இன்று ஒரு நாள் கடையடைப்பு
போராட்டம் நடத்தினர். உடுமலை, மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.