உடுமலையில் முருங்கைக்காய் விலை உயர்வு

2பார்த்தது
உடுமலையில் முருங்கைக்காய் விலை உயர்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள தினசரி சந்தைக்கு முருங்கை வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் முருங்கைக்காயின் வரத்து கடந்த சில வாரங்களாகவே குறைவாக உள்ளது. இதனால், தட்டுப்பாடு அதிகரித்து, முருங்கைக்காய் விலை தற்போது கிலோ ₹95 ஆக உயர்ந்துள்ளது. வரும் வாரங்களில் வரத்து மேலும் குறைந்து முகூர்த்த சீசன் தொடங்குவதால், முருங்கை விலை பல மடங்கு உயரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி