திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் நடைபெற்ற தவெக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில்,
திமுக-அதிமுக கூட்டணி தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக முயற்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இன்னும் 25 ஆண்டுகளுக்கு தவெகவை யாரும் அசைக்க முடியாது என்றும் கூறினார். இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.