உடுமலையில் குடிநீர் கேட்டு ஓன்றிய அலுவலகம் முற்றுகை

932பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை இந்திரா நகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் விநியோகம் சரிவர நடைபெறாததை கண்டித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் பொதுமக்கள் சார்பில் சசிகலா தலைமையில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கப்பட்டது. இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் தோழர் தட்சிணாமூர்த்தி, மாதர் சங்க மாவட்ட தலைவர் கே.சித்ரா ரணதேவ் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி