உடுமலையில் வழித்தடம் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் ஆய்வு

1258பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் உள்ள டிவி படுடினம் பகுதியில் அமைந்துள்ள பிளேக் மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோவில்களின் நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், நகராட்சி ஆணையாளர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, நிலங்களை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

தொடர்புடைய செய்தி