திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சனிக்கிழமை நடைபெற்ற நூலகம் திறப்பு விழா மற்றும் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மேடையில் ஒரு மூதாட்டி உதயநிதி ஸ்டாலினின் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.