திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ராகல் பாவி பிரிவு பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது, உடுமலையிலிருந்து பால் ஏற்றிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காவல்துறை தரப்பில், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.