திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருப்பூர் ரோடு முதல் அய்யம்பாளையம் புதூர் செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு பகல் என பாராமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.