திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன பாப்பனத்தூர் கிராமத்தில் உள்ள நீர்நிலை குட்டைப் பகுதியில் மயான நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து தரக்கோரி கிராம மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், வருகிற 24-ஆம் தேதி உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி இந்த போராட்டம் நடைபெற உள்ளது.