திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் மின் கம்பத்தில் புறா ஒன்று சிக்கி உயிருக்கு போராடியது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, மின் கம்பத்தில் சிக்கியிருந்த புறாவை பத்திரமாக மீட்டனர். பின்னர், அந்த புறா பத்திரமாக வெளியே பறக்க விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.