உடுமலை அருகே குண்டும் குழியுமான சாலை - மக்கள் அவதி

741பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை சாலையிலிருந்து குரல்குட்டை ஊராட்சி மடத்தூருக்கு அமைக்கப்பட்ட சாலை, போதிய பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாலையை உடனடியாக சீரமைக்க அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாகியும் சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி