திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இந்திரா நகர் துணை மின் நிலையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும். உடுமலை மின் நகர், இந்திரா நகர், ராஜாவூர், நாவல் குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கடாபுரம், துங்காவில், ராமே கவுண்டன் புதூர், மெட்ராத்தி, போலார் மற்றும் கேகே புதூர் ஆகிய பகுதிகளில் இந்த மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.