திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர் புதூர் துணை மின் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவனூர் புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராமநாதபுரம், ஆண்டியூர், சின்னபொம்மன் சாலை, பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வல்ல கொண்டாபுரம், வழையபாளையம், அர்த்தனாரி பாளையம், புங்கமுத்தூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.