திருப்பூர் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் இலவச வீட்டு மனைப் பட்டா உடனே வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டமங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிய நிலங்களை உடனே வழங்க வேண்டும், மாற்று பயன்பாட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் இடப்பட்டன. இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.