திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுக்கா அலுவலகம் முன்பு கோட்டமங்கலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரங்கநாதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கோட்டமங்கலம் கிராமத்தில் அரசு ஊழிய நிலத்தில் பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், குடிமங்கலம் செயலாளர், சி ஐ டி யூ செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.