திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எரிசனம்பட்டியில் உள்ள அரசு மதுபானக் கடை குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், கிராம மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் கடை அகற்றப்படவில்லை. தற்போது தமிழக அரசு அறிவித்தபடி, இந்தக் மதுபானக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.