திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டையில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடையை அகற்ற கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை துணை வட்டாச்சியர் தினேஷ் ராகவன் 15 நாட்களுக்குள் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால்
போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிகழ்வில் குறிச்சி கோட்டை பகுதி
பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.