திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எழையமுத்தூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, எழையமுத்தூர் மேட்டுக்காடு தனியார் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி, உடுமலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.