திருப்பூர் உடுமலை தளி ரோடு மேம்பாலம் அருகில் மின் டிரான்ஸ்பாரம் திடீரென சாய்ந்ததால் அப்பகுதியில் இரவு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் எடுக்கும் பணியின்போது மின் கம்பம் சாய்ந்ததாக கூறப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் மின்கம்பத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.