திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் விடுமுறை நாட்களில் பெய்த மழையால் மழைநீர் வடிகால் வசதி சரியாக இல்லாததால் நீர் தேங்கியுள்ளது. இதனால், தினமும் காலை நடை பயிற்சிக்கு வருபவர்களும், ஹாக்கி, கிரிக்கெட், வாலிபால், பேஸ்கட்பால் போன்ற விளையாட்டுகளை விளையாடும் மாணவர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.