திருப்பூர் உடுமலை நகராட்சிக்குட்பட்ட 13வது வார்டு லயன்ஸ் கிளப் அருகில் உள்ள யு.கே.சி பகுதியில் பல நாட்களாக பெய்து வரும் மழையால் குடியிருப்புகளுக்கு முன்பு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக மழைநீர் வடிகால்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.