உடுமலை அருகே ரவுண்டான அமைக்க கோரிக்கை

1416பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பகுதியிலிருந்து வால்பாறை, கோவை, உடுமலை செல்லும் சாலைகள் சந்திப்பதால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த கோரிக்கை கிடப்பில் உள்ள நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்து ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.