உடுமலை அருகே விவசாயிகள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் கிளை கால்வாயில் முறையாக பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் உடுமலை தாராபுரம் சாலையில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.

இதனால பகுதிகள் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நாளை காலை முறையாக தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூறியதால் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
Job Suitcase

Jobs near you