உடுமலை அருகே படைப்புழு தாக்குதல் - அதிகாரிகள் ஆய்வு

882பார்த்தது
உடுமலை அருகே படைப்புழு தாக்குதல் - அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆதி சாமி தலைமையில், பொங்கலூர் வட்டார வேளாண் அறிவியல் பேராசிரியர் ஆனந்தராஜ், உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி, குடிமங்கலம் வட்டார உதவியாளர் தின கார்த்திகா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். படைப்புழு தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு தடுப்பு வழிமுறைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர்.