திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் ஊர் புற நூலகத்தில் பாம்பு ஒன்று புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று காலையில் நூலகத்திற்குள் பாம்பு இருப்பதை கண்ட பொதுமக்கள், நூலகத்திற்கு வர அச்சப்படுகின்றனர். இதனால், நூலகத்தில் உள்ள பாம்பை உடனடியாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.