திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் உள்ள பூர்வீக பள்ளிவாசலில், இறைவனின் தூதரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். இந்த சிறப்பு தொழுகையில் உடுமலை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.