உடுமலையில் கல்லறை திருநாள் சிறப்பு பிரார்த்தனை

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருச்சி தஞ்சை திருமண்டலத்தின் உடுமலை மறை மாவட்டத்தில் கல்லறை தோட்டத்தில் சகல ஆத்மாக்களின் (கல்லறை திருநாள்) இன்று கடைபிடிக்கப்பட்டது. மாவட்டத்தின் தலைவரும் உடுமலை இம்மானுவேல் ஆலய தலைவருமான செல்வராஜ் ஜெபித்து நிகழ்ச்சியைத் தொடங்கினார். உடுமலை கிருஸ்துநாதர் ஆலயத்தின் சேகர தலைவர் டேனியல் சிறப்பு செய்தி வழங்கினார். இந்த நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி