திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இன்று விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.