உடுமலை அரசுகல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

53பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கில இலக்கியம், பொருளியல், அரசியல் அறிவியல், பிகாம் சிஏ உள்ளிட்ட பல்வேறு இளநிலை பட்ட வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு சேர்க்கை துவங்கி உள்ளது. 

மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் www.gacudpt.in என்ற கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்படும். தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you