திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தும்பலபட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார் இவர் குறிச்சிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த மாதம் 26 ஆம் தேதி கால்வாயில் சென்ற போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் வசந்தகுமார் பிளஸ் டூ தேர்வில் 550 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் பிளஸ் டூ தேர்வில் அதிகமான மதிப்பெண் எடுத்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.