உடுமலை தொழிற்பயிற்சி நிலையத்தை சுத்தம் செய்த மாணவர்கள்

1534பார்த்தது
உடுமலை தொழிற்பயிற்சி நிலையத்தை சுத்தம் செய்த மாணவர்கள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இலைய முத்தூர் சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மாணவர்கள் வகுப்புகளுக்குப் பதிலாக மைதானத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள், நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய நேரத்தில் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி