திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிஐடியு திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநாடு
ஸ்டாலின் நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் குமார் நிறைவுரை ஆற்றினார். மாநாட்டில் இன்றைய
அரசியல் நிலைமைகள் குறித்து விளக்கப்பட்டதுடன், கட்டுமான தொழிலாளர் சங்கத்தை வளப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் நிர்வாகிகள் உரையாற்றினர்.