திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் நான்காவது நாளாக பாதகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுகளுக்கு 12 மாத சம்பளம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.