உடுமலையில் பயங்கர தீ விபத்து -10 லட்சம் சேதம்

1பார்த்தது
திருப்பூர் உடுமலை பஸ் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு 10 மணியளவில் துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வியாபாரம் முடிந்து ஊழியர்கள் வீடு திரும்பும் நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஊழியர்கள் உடனடியாக தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில், உடுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும், துணிக்கடையில் இருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.