திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகம் முன்பு, தமிழக வெற்றிக் கழகத்தினர் சுகாதார அலுவலகத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதனால் அலுவலகத்திற்குச் செல்லும் அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பேனரை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.