உடுமலையில் மின்கம்பி அருந்து விழுந்ததால் பரபரப்பு!

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் அருகே மின்கம்பி தீப்பொறி வந்து கொண்டிருந்தது. இதை கண்ட சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகி சையது இப்ராஹிம் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து மின் கம்பியை சரி செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

டேக்ஸ் :