திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்திருந்த இரும்பு பாலம் சரிசெய்யப்பட்டதை அடுத்து, 12 நாட்களுக்குப் பிறகு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.