திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிகளில் குளித்து நீராடி மகிழ்ந்தனர். அமணலிங்கேஸ்வரர் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.