உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மதியம் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டு தடை விதிக்கப்பட்டது. தற்போது மழைப்பொழிவு குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.